< Back
கால்பந்து
கால்பந்து
லா லிகா கால்பந்து: ஜிரோனா அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் வெற்றி
|8 Dec 2024 12:47 PM IST
சிறப்பாக விளையாடி ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது
மாட்ரிட்,
20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிரோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரியல் மாட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியில் பெலிங்காம் , அர்தா குலர் எம்பாப்பே ஆகியோர் கோல் அடித்தனர்.