< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத் எப்.சி. தலைமை பயிற்சியாளர் நீக்கம்

Image Courtesy: @HydFCOfficial

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஐதராபாத் எப்.சி. தலைமை பயிற்சியாளர் நீக்கம்

தினத்தந்தி
|
20 Dec 2024 1:39 PM IST

உதவி பயிற்சியாளர் ஷமீல் செம்பகத் இடைக்கால பயிற்சியாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத் எப்.சி. அணி 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, ஒரு டிரா, 8 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.

அந்த அணியின் மோசமான செயல்பாடு எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் தங்போய் சிங்டோ நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

தங்போய் சிங்டோ 2020 முதல் உதவி பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனராக (இளைஞர்) பணியாற்றிய பின்னர் கடந்த ஜூலை 2023-ல் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். உதவி பயிற்சியாளர் ஷமீல் செம்பகத் இடைக்கால பயிற்சியாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்