< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் எப்.சி - பஞ்சாப் எப்.சி அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @RGPunjabFC

கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் எப்.சி - பஞ்சாப் எப்.சி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
17 Dec 2024 7:59 AM IST

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா ,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இதையடுத்து இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் அந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி - பஞ்சாப் எப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் எப்.சி. 5ம் இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி. 11வது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு ௭.௩௦ மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்