< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து; கோல் மழை பொழிந்த சென்னை...ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி
|4 Nov 2024 9:39 PM IST
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது
ஜாம்ஷெட்பூர்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டனர். இதன் காரணமாக முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் சென்னை அணியினர் கோல் மழை பொழிந்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. அபார வெற்றி பெற்றது.