< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் - சென்னையின் எப்.சி அணிகள் இன்று மோதல்
|24 Nov 2024 6:35 AM IST
கொச்சியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
கொச்சி,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொச்சியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சென்னையின் எப்.சி. அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.