< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி
|18 Oct 2024 1:56 AM IST
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.
கவுகாத்தி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 11 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் நெஸ்டர் அல்பியாச் 5-வது நிமிடத்திலும், அலாதீன் 89-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சென்னை அணி சார்பில் வில்மர் ஜோர்டன் கில் 25 மற்றும் 51-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். லுகாஸ் பிவெட்டா 83-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி, 3-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.