< Back
கால்பந்து
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்தில் 1,000-வது ஆட்டம்: சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
|9 Nov 2024 3:42 PM IST
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சென்னை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. - நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதுகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில், இது 1,000-வது ஆட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும். நடப்பு தொடரில் சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. மும்பை அணி 6 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இதையடுத்து கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - முகமதன் எஸ்.சி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.