< Back
கால்பந்து
கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக அர்ஜென்டினா சாம்பியன்

image courtey: twitter/@CopaAmerica

கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக அர்ஜென்டினா சாம்பியன்

தினத்தந்தி
|
15 July 2024 12:07 PM IST

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.

மியாமி,

48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் மியாமி நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, முன்னாள் சாம்பியன் கொலம்பியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்சி காயம் காரணமாக வெளியேறினார்.

அவருக்கு மாற்று வீரராக களமிறங்கிய லாடரோ மார்டினெஸ் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது. மேலும் தொடர்ந்து 2-வது முறையாகவும் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

மேலும் செய்திகள்