< Back
கால்பந்து
கால்பந்து
கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: சிலி - பெரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
|22 Jun 2024 2:26 PM IST
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிலி மற்றும் பெரு அணிகள் மோதின.
டெக்சாஸ்,
உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் டெக்சாஸில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிலி மற்றும் பெரு அணிகள் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்.
ஆனால் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என டிரா ஆனது.