< Back
கால்பந்து
கோபா அமெரிக்க கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் ஈகுவடார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

image courtesy: twitter/@CopaAmerica

கால்பந்து

கோபா அமெரிக்க கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் ஈகுவடார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

தினத்தந்தி
|
5 July 2024 9:25 AM IST

அர்ஜென்டினா - ஈகுவடார் காலிறுதி ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

கலிபோர்னியா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று நடைபெற்ற காலிறுதியின் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினா, ஈகுவடார் அணியை எதிர்த்து விளையாடியது. இரு அணிகளும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. வழக்கமான ஆட்ட நேரத்தில் இந்த போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அர்ஜென்டினா தரப்பில் லிசண்ட்ரோ மார்ட்டினசும், ஈகுவடார் தரப்பில் கெவின் ரோட்ரிக்சும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகள்