< Back
கால்பந்து
கால்பந்து
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி லிவர்பூல் வெற்றி
|28 Nov 2024 3:26 PM IST
லிவர்பூல் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது.
லண்டன்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது . இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது.
இதனால் ஆட்ட நேர முடிவில் 2-௦ என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது . லிவர்பூல் அணியில் மெக் அலிஸ்டர் 52-வது நிமிடத்திலும் , கோடி கக்போ 76-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .