< Back
கிரிக்கெட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

image courtesy: Zimbabwe Cricket twitter

கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
9 Dec 2024 6:25 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியில் சாம் கர்ரனின் சகோதரரான பென் கர்ரன் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காததால் ஜிம்பாப்வேவுக்கு இடம் பெயர்ந்த அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜிம்பாப்வே ஒருநாள் அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே டி20 அணி விவரம்; சிக்கந்தர் ராசா (கேப்டன்), பராஸ் அக்ரம், பிரைன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசேகிவா, பிளெசிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி.

ஜிம்பாப்வே ஒருநாள் அணி விவரம்; கிரேக் எர்வின் (கேப்டன்), பிரைன் பென்னட், பென் கர்ரன், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசெகிவா, பிளெசிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நயாச்சி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.

மேலும் செய்திகள்