< Back
கிரிக்கெட்
யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது? - விரைவில் படப்பிடிப்பு

கோப்புப்படம் 

கிரிக்கெட்

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது? - விரைவில் படப்பிடிப்பு

தினத்தந்தி
|
20 Aug 2024 6:43 PM IST

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர்.

இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டி- சீரீஸ் தயாரிக்க உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்களான பூஷன்குமார் மற்றும் ரவி பக்சந்த்கா எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யுவராஜ் சிங் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள்? என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடையே தற்போதே எழுந்துள்ளது.



மேலும் செய்திகள்