இந்திய இளம் வீரர் காயம்....நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்..?
|இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை தொடங்குகிறது.
பெங்களூரு,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து அணி டாம் லதாம் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. கழுத்து மற்றும் தோள்பட்டை வலி காரணமாக சுப்மன் கில் நாளை தொடங்கும் ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.