< Back
கிரிக்கெட்
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஆஸி.வீரரை கலாய்த்த பும்ரா
கிரிக்கெட்

நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஆஸி.வீரரை கலாய்த்த பும்ரா

தினத்தந்தி
|
29 Dec 2024 2:32 PM IST

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் லபுஸ்சேன் 70 ரன்கள் அடித்தார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன.

இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை லபுஸ்சேன் - கம்மின்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். லபுஸ்சேன் 70 ரன்களிலும், கம்மின்ஸ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக இந்த இன்னிங்சின்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஸ்சேன் பலமுறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பித்தார். ஜெய்ஸ்வால் ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அதன் உதவியில் அரைசதம் கடந்த அவர் முகமது சிராஜ் பந்துவீச்சில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவர் அரைசதம் அடித்ததற்கு அவருக்கு தவறவிடப்பட்ட வாய்ப்புகளே காரணமாக அமைந்தன.

ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக தப்பிக் கொண்டிருந்த லபுஸ்சேன், பும்ரா ஓவரிலும் ஒரு முறை தப்பினார்.

அப்போது ஜஸ்பிரித் பும்ரா, லபுஸ்சேனை நோக்கி, "என் வாழ்நாளில் நான் பார்த்ததிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி பேட்ஸ்மேன் நீங்கள்தான், மார்னஸ்" என்று கலாய்த்தார்.

மேலும் செய்திகள்