< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

தினத்தந்தி
|
9 Dec 2024 4:09 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 109 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்) 2ம் இடத்திலும், இந்தியா (57.29 சதவீதம்) 3ம் இடத்திலும், இலங்கை (45.45 சதவீதம்) 4வது இடத்திலும் உள்ளன. இந்தப்பட்டியலில் 5 முதல் 9 இடங்களில் முறையே இங்கிலாந்து (45.24 சதவீதம்), நியூசிலாந்து (44.23 சதவீதம்), பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன.

மேலும் செய்திகள்