உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: இந்தியா மீண்டும் நம்பர் 1
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதன் மூலம் முதலிடத்தை இழந்த இந்தியா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு முன்னர் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-
1. இந்தியா - 61.11 சதவீதம்
2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம்
3. இலங்கை - 55.56 சதவீதம்
4. நியூசிலாந்து - 54.55 சதவீதம்
5. தென் ஆப்பிரிக்கா - 54.17 சதவீதம்
6. இங்கிலாந்து - 40.79 சதவீதம்
7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம்
8. வங்காளதேசம் - 27.50 சதவீதம்
9. வெஸ்ட் இண்டீஸ் - 18.52 சதவீதம்