< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

image courtesy; AFP

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Sept 2024 5:51 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்;

லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர் (விக்கெட் கீப்பர்), அயன்டா ஹ்லூபி, சினாலோ ஜப்டா (விக்கெட் கீப்பர்), மரிசான் கேப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா , செஷ்னி நாயுடு , துமி செக்குகுனே , சோலி ட்ரையன்

ரிசர்வ் வீராங்கனை; மியான் ஸ்மிட்




மேலும் செய்திகள்