மகளிர் டி20 உலகக்கோப்பை; ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு
|மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
எடின்பர்க்,
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேத்ரின் பிரைஸ் கேப்டனாகவும், சாரா பிரைஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்து அணி விவரம்;
கேத்ரின் பிரைஸ் (கேப்டன்), சாரா பிரைஸ் (துணை கேப்டன்), லோர்னா ஜாக்-பிரவுன், அப்பி ஐட்கன்-ட்ரம்மண்ட், அப்தாஹா மக்சூத், சாஸ்கியா ஹார்லி, க்ளோ ஆபெல், பிரியனாஸ் சாட்டர்ஜி, மேகன் மெக்கால், டார்சி கார்ட்டர், ஐல்சா லிஸ்டர், ஹன்னா ரெய்னேரி , கேத்தரின் ப்ரேசர், ஒலிவியா பெல்.