< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை: சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்த ஐ.சி.சி.

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை: சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்த ஐ.சி.சி.

தினத்தந்தி
|
21 Oct 2024 7:53 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை தேர்வு செய்து சிறந்த அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஐ.சி.சி. தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-

வோல்வார்ட் (கேப்டன்), தாஸ்மின் பிரிட்டிஸ் நோன்குலுலேகோ ம்லபா (மூவரும் தென் ஆப்பிரிக்கா), மேகன் ஸ்கட் (ஆஸ்திரேலியா), டேனி வியாட் ஹாட்ஜ் (இங்கிலாந்து), அமெலியா கெர், ரோஸ்மேரி மேய்ர் (இருவரும் நியூசிலாந்து) ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா), தியான்ரா டோட்டின், எபி பிளெட்சர் ( இருவரும் வெஸ்ட் இண்டீஸ்), நிகர் சுல்தானா (வங்காளதேசம்)

12-வது வீராங்கனை: ஈடன் கார்சன் (நியூசிலாந்து)

மேலும் செய்திகள்