பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
|16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது .
சார்ஜா,
9-வது பெண்கள் உலகக் கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீராங்கனைகளாக ஷாதி ராணி , முர்ஷிதா ஆகியோர் களமிறங்கினர். முர்ஷிதா 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஷாதி ராணி 29 ரன்களுக்கு வெளியேறினார் தொடர்ந்து களமிறங்கிய தேஜ் நேகர் ரன் எதுவும் எடுக்காமலும் , நிகர் சுல்தானா 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணியில் நிலைத்து விளையாடிய ஷோபனா 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் சசிகலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடியது.
தொடக்கம் முதல் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது இதனால் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் சாரா பிரைஸ் 49 ரன்கள் எடுத்தார் . இதனால் 16ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது .