கிரிக்கெட்
மகளிர் டி20 உலகக்கோப்பை; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

image courtesy;twitter/@ICC

கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக்கோப்பை; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Aug 2024 8:13 AM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலில் இந்த தொடர் வங்காளதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் வங்காளதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த தொடர் தற்போது யு.ஏ.இ-யில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு அலிசா ஹீலி கேப்டனாகவும், தஹ்லியா மெக்ராத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ் கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், போப் லிட்ச்பீல்ட், தஹ்லியா மெக்ராத், சோபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமிங்க், ஜார்ஜியா வேர்ஹேம்.



மேலும் செய்திகள்