மகளிர் டி20 கிரிக்கெட்; இந்திய அணி 217 ரன்கள் குவிப்பு
|ஸ்மிருதி மந்தனா 77 ரன்களும், ரிச்சா கோஷ் 54 ரன்களும் எடுத்தனர்
நவிமும்பை,
வெஸ்ட்இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் பந்துவீச்சை செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்கம் முதல் இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 217 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி ஸ்மிருதி மந்தனா 77 ரன்களும், ரிச்சா கோஷ் 54 ரன்களும் எடுத்தனர் . தொடர்ந்து 218 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.