< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

Image Courtesy:@englandcricket

கிரிக்கெட்

மகளிர் டி20 கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

தினத்தந்தி
|
25 Nov 2024 8:34 AM IST

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 59 ரன் எடுத்தார்.

கேப்டவுன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் டி20 போட்டிகள் முதலில் நடைபெறுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேடிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நாடின் டி கிளார்க் 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து 19.2 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 143 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 59 ரன் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்