கிரிக்கெட்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; முதல் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; முதல் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
10 Jan 2025 7:45 AM IST

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

ராஜ்கோட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டிகள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இவ்விரு அணிகள் இடையேயான முதல் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மிர்தி மந்தனா அணியை வழிநடத்துகிறார்.

கேபி லீவிஸ் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஒர்லா பிரன்டெர்காஸ்ட் உள்ளிட்ட சிறந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய அயர்லாந்து அணி எல்லா வகையிலும் போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்