மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
|இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லிட்ச்பீல்டு (60 ரன்கள்), பெத் மூனி (56 ரன்கள்) அரைசதமும், ஜார்ஜியா வோல் (101 ரன்கள்), எல்லிஸ் பெர்ரி (105 ரன்கள்) சதமும் அடித்து அசத்தினர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சைமா தாகோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.