மகளிர் கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்... தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு
|இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
டர்பன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், 2வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நாளை தொடங்குகிறது.
இந்த தொடர் நிறைவடைந்ததும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு லாரா வோல்வார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்; லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டாஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், லாரா குடால், அயண்டா ஹ்லுபி, சினாலே ஜாப்டா, மடிசான் கேப், மசபாடா கிளாஸ், சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, துமி செகுகுனே, சோலி ட்ரையோன்.