பெண்கள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்... நியூசிலாந்து அணி அறிவிப்பு
|நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
வெல்லிங்டன்,
சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் வரும், 24ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சோபி டிவைன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம்; சோபி டிவைன் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், லாரன் டவுன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, பாலி இங்கிலிஸ், பிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், மெலி கெர், மோலி பென்போல்ட், ஜார்ஜியா பிலிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹு.