< Back
கிரிக்கெட்
பெண்கள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நியூசிலாந்து வீராங்கனை விலகல்

image courtesy; @ICC

கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நியூசிலாந்து வீராங்கனை விலகல்

தினத்தந்தி
|
27 Oct 2024 9:06 AM IST

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

அகமதாபாத்,

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்தின் முன்னணி வீராங்கனையான மெலி கெர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவாட்ரைசெப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்