< Back
கிரிக்கெட்
மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்...வங்காளதேச அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்...வங்காளதேச அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
7 Jan 2025 9:40 PM IST

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நிகர் சுல்தானா ஜோட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்: நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர், முர்ஷிதா காதுன், திலாரா அக்டர், ஷர்மின் அக்தர் சுப்தா, சோபானா மோஸ்டரி, ஷோர்னா அக்தர், லதா மொண்டோல், ரபேயா, பஹிமா காதுன், பரிஹா இஸ்லாம் த்ரிஸ்னா, சுல்தானா காதுன், பர்சானா ஹக், தாஜ் நெஹர், ஷஞ்சிதா அக்தர் மாக் , மரூபா அக்தர்.


மேலும் செய்திகள்