< Back
கிரிக்கெட்
பெண்கள் பிக் பாஷ் லீக்; அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இணைந்த ஸ்மிருதி மந்தனா

image courtesy: AFP

கிரிக்கெட்

பெண்கள் பிக் பாஷ் லீக்; அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இணைந்த ஸ்மிருதி மந்தனா

தினத்தந்தி
|
27 Aug 2024 11:59 AM IST

பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆட மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மெல்போர்ன்,

இந்தியாவில் ஐ.பி.எல் மற்றும் டபிள்யூ.பி.எல் தொடர்கள் நடைபெறுவது போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரின் 10வது சீசன் வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆட இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா ஏற்கனவே பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்காக ஆடி உள்ளார். இந்த வருடம் நடைபெற்ற டபிள்யூ.பி.எல் தொடரில் மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்