மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
|இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. 103 ரன்கள் அடித்தது.
தம்புல்லா,
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் - யு.ஏ.இ. அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக தீர்த்தா 40 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், சந்து மற்றும் துபா ஹசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 14.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகளான குல் பெரோசா 62 ரன்களுடனும், முனீபா அலி 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.