மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை அபார பந்துவீச்சு... வங்காளதேசம் 111 ரன்கள் சேர்ப்பு
|வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக நிகார் சுல்தானா 48 ரன்கள் அடித்தார்.
தம்புல்லா,
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்காளதேசம் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் இஷ்மா தஞ்சிம் டக் அவுட் அகியும், திலாரா அக்தர் 6 ரன்களிலும், அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ருபயா ஹெய்டர்ட் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தும் அதிர்ச்சி அளித்தனர். இந்த சரிவிலிருந்து கேப்டன் நிகார் சுல்தானா மற்றும் ஷோர்னா அக்தர் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டு கவுரமான நிலையை எட்ட உதவினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிகார் சுல்தானா 48 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பிரபோதனி மற்றும் பிரியதர்ஷினி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் செய்ய உள்ளது.