< Back
கிரிக்கெட்
மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர்; இங்கிலாந்து அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2024 1:02 PM IST

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித போட்டிகளுக்கும் ஹீதர் நைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் (4 நாள்) விளையாடவிருக்கிறது.

டி20 போட்டிகள் சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் மைதானங்களிலும், ஒருநாள் போட்டிகள் சிட்னி, மெல்போர்ன், ஹோபர்ட் மைதானங்களிலும் நடைபெறுகிறது. 4 நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆல்-ரவுண்டர் ப்ரெயா கெம்ப், சுழற்பந்துவீச்சாளர் லின்சே ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் - பேட்டர் பெஸ் ஹீத் ஆகியோர் முதல் முறையாக ஆஷஸ் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி: ஹீதர் நைட் (கேப்டன்ட்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பெளச்சியர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், சாரா க்ளென், எமி ஜோன்ஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து டி20 அணி: ஹீதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மையா பெளச்சியர், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், டேனியல் கிப்சன், சாரா க்ளென், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ப்ரேயா கெம்ப், லின்சி ஸ்மித், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஹீதர் நைட்(கேப்டன்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பெளச்சியர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ரியானா மெக்டொனால்ட்-கே. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.


மேலும் செய்திகள்