மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர்; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
|2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,
2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் (4 நாள்) விளையாடவிருக்கிறது.
டி20 போட்டிகள் சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் மைதானங்களிலும், ஒருநாள் போட்டிகள் சிட்னி, மெல்போர்ன், ஹோபர்ட் மைதானங்களிலும் நடைபெறுகிறது. 4 நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு அலிசா ஹீலி கேப்டனாகவும், தஹ்லியா மெக்ராத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் அனுபவ ஆல் ரவுண்டரான சோபி மோலினக்ஸ் இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவர் இடம் பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 அணி விவரம்: அலிசா ஹீலி (கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னெர், கிம் கார்த், அலனா கிங், போப் லிட்ச்பீல்ட், தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷீட், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல். ஜார்ஜியா வேர்ஹாம், கிரேஸ் ஹாரிஸ் (டி20 மட்டும்).