ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் அகில் ஹுசைன்
|20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹூசைன் 3 முதலிடத்தை பிடித்துள்ளார்.
துபாய்,
ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை, பந்து வீச்சாளர் தரவரிசை மற்றும் டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை, பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இதன்படி 20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹூசைன் 3 இடம் உயர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் இங்கிலாந்தின் அடில் ரஷித் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல்
* 20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பில்ப் சால்ட் உள்ளார்.
* டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தை பெற்றார். சக வீரர் ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு இறங்கினார்.
* டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். அவரைத்தொடர்ந்து 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா உள்ளார்.