< Back
கிரிக்கெட்
வில் சதர்லேண்ட் அதிரடி... பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்திய மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

Image Courtesy: @BBL / @RenegadesBBL

கிரிக்கெட்

வில் சதர்லேண்ட் அதிரடி... பெர்த் ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்திய மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

தினத்தந்தி
|
7 Jan 2025 6:38 PM IST

பிக் பாஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.

பெர்த்,

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரின் 14-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

பெர்த் தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்டன் அகர் 51 ரன்கள் எடுத்தார். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மெல்போர்ன் அணி 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மெல்போர்ன் தரப்பில் மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 2 ரன்னிலும், டிம் செய்பர்ட், ஜேக் பிரேசர் மெக்கர்க், லாரி எவான்ஸ் ஆகியோர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து வில் சதர்லேண்ட் மற்றும் தாமஸ் ஸ்டீவர்ட் ரோஜர்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் வில் சதர்லேண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக அடிய சதர்லேண்ட் அரைசதம் அடித்த நிலையில் 70 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து குரிந்தர் சந்து களம் இறங்கினார்.

இறுதியில் மெல்போர்ன் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் தரப்பில் அதிரடியாக ஆடிய வில் சதர்லேண்ட் 70 ரன்கள் எடுத்தார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டார்ப், ரிச்சர்ட்சன், லான்ஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்