
image courtesy:PTI
மும்பை அணியில் ஜெய்ஸ்வாலை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் விலகலா..? உண்மை என்ன..?

உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விலகியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் ஜெய்ஸ்வால் தற்போது உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவாவுக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.
இதனிடையே மும்பை அணியிலிருந்து ஜெய்ஸ்வாலை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யகுமார் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் திரைக்கதை ஆசிரியரா அல்லது பத்திரிகையாளரா?. நான் சிரிக்க வேண்டும் என்றால் நகைச்சுவை படங்களை பார்ப்பதை விட்டுவிட்டு, இது போன்ற கட்டுரைகளை படிக்க தொடங்கலாம் என்று இருக்கிறேன். இந்த செய்தி முற்றிலும் முட்டாள்தனமானது' என்று பதிவிட்டுள்ளார்.