டி20 தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா.? - இலங்கையுடன் இன்று மோதல்
|இந்தியா-இலங்கை அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது
பல்லகெலே,
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கடந்த ஆட்டத்தில் 162 ரன் இலக்கை இந்திய அணி விரட்டுகையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் 8 ஓவர்களில் 78 ரன்னாக வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனை இந்தியா 6.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. அதே போல கடைசி போட்டியிலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்;
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் அல்லது கலீல் அகமது.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மென்டிஸ், அசலங்கா (கேப்டன்), தசுன் ஷனகா, ஹசரங்கா, ரமேஷ் மென்டிஸ், தீக்ஷனா, பதிரானா, அசிதா பெர்னாண்டோ.