< Back
கிரிக்கெட்
3-வது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பா..? மறுப்பு தெரிவித்த அபிஷேக் நாயர்
கிரிக்கெட்

3-வது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பா..? மறுப்பு தெரிவித்த அபிஷேக் நாயர்

தினத்தந்தி
|
31 Oct 2024 12:37 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 3-வது போட்டியின்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அறிமுக வீரராக ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் 3-வது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாக வாய்ப்பே இல்லை என இந்திய அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணியில் யாரும் புதிதாக சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஒரு வீரருக்கு முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி குறித்து நாங்கள் அதிகமாக யோசிக்கவில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் மட்டும்தான் கவனம் செலுத்த இருக்கிறோம். அதேபோன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகவில்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்