< Back
கிரிக்கெட்
வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஏன்..? - தலைமை பயிற்சியாளர் விளக்கம்

image courtesy: AFP

கிரிக்கெட்

வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஏன்..? - தலைமை பயிற்சியாளர் விளக்கம்

தினத்தந்தி
|
23 Oct 2024 7:08 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்களுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தமிழக ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கும் போது சுந்தர் சேர்க்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது குறித்து தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நியூசிலாந்து அணியில் 4 - 5 இடது கை பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே எங்கள் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் எடுத்துச் செல்லும் ஸ்பின்னர் ஒருவர் இருப்பது நல்லது என உணர்ந்தோம்.. அது எப்போதும் பயனைக் கொடுக்கும். ஆனால் எங்களுடைய பிளேயிங் லெவன் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. 2 தொடக்க வீரர்கள் மற்றும் ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மட்டுமே உறுதி செய்துள்ளோம். நிறைய கட்டுப்பாட்டை கொடுக்கக்கூடிய வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார்.

தரமான வீரரான அவர் அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பது எங்களுக்கு தெரியும். ஒருவேளை நாளை அவர் விளையாடினால் முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தை கொடுப்பார். பந்து வீச்சில் நல்ல கட்டுப்பாட்டையும் லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங்கையும் கொடுப்பார். ஆனால் எங்களிடம் மற்றொரு விரல் ஸ்பின்னர் அக்சர் படேல் மற்றும் மணிக்கட்டு ஸ்பின்னர் குல்தீப் இருக்கிறார்கள். எனவே பிட்ச்சை பார்த்து விட்டு நாங்கள் அதற்குத் தகுந்த முடிவை எடுப்போம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்