கிரிக்கெட்
அஸ்வினுக்குப் பின் அடுத்த தலைமுறை ஆப் ஸ்பின்னர் யார்? - தினேஷ் கார்த்திக் கணிப்பு

Photo Credit: ICC

கிரிக்கெட்

அஸ்வினுக்குப் பின் அடுத்த தலைமுறை 'ஆப் ஸ்பின்னர்' யார்? - தினேஷ் கார்த்திக் கணிப்பு

தினத்தந்தி
|
26 Aug 2024 9:11 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார்.

மேலும், 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஸ்வின் இதுவரை 516 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அடுத்த மாதம் அஸ்வின் 38 வயதை எட்ட உள்ளார். இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக அடுத்த தலைமுறை ஆப் ஸ்பின்னரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், அஸ்வினுக்கு பின் இந்தியாவின் அடுத்த தலைமுறை ஆப் ஸ்பின்னராக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறித்து தனது கணிப்பை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அடுத்த தலைமுறைக்கான ஆப் ஸ்பின்னரை இந்திய அணி நிர்வாகம் நிச்சயம் தேடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் 3 ஆப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு அளிக்கபட்டது. புல்கிட் நரங், சரன்ச்க் ஜெய்ன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மூவரையும் தான் இந்திய அணி அடுத்த ஆப் ஸ்பின்னர் ரோலுக்கு தயார் செய்து வருவதாக நினைக்கிறேன்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கான ரேசில் வாஷிங்டன் சுந்தர் தான் முன்னிலையில் உள்ளார். அவர் இதுவரை தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார். அதன் காரணமாக அஸ்வின் இடத்திற்கான முதன்மை வாய்ப்பு வாஷிங்டன் சுந்தருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்