ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல போகிறீர்கள் ? போட்டியின்போது பண்ட்டிடம் கேள்வி கேட்ட லியோன்
|போட்டியின் போது ரிஷப் பண்டிடம் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல போகிறீர்கள் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் கேள்வி எழுப்பினார்
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்தனர்
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதனையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியின் போது ரிஷப் பண்ட்டிடம்..டிடம் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிக்கு செல்ல போகிறீர்கள் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த பண்ட் எந்த யோசனையும் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது . ஐபிஎல் ஏலம் வரும் 24,25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.