< Back
கிரிக்கெட்
முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார்..? - கேப்டன் பும்ரா பதில்

image courtesy: AFP

கிரிக்கெட்

முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார்..? - கேப்டன் பும்ரா பதில்

தினத்தந்தி
|
22 Nov 2024 1:29 PM IST

முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.

முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் முகமது ஷமி அணிக்கு திரும்புவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பும்ரா, "ஷமி பாய் விளையாடத் தொடங்கியுள்ளார். அவர் எங்களுடைய அணியின் முக்கியமான வீரர். அவர் மீது இந்திய அணி நிர்வாகம் நெருக்கமான கண்களை வைத்திருக்கும் என்று உறுதியாக சொல்வேன். எனவே விஷயங்கள் சரியாக இருந்தால் அவர் இங்கே விளையாடுவதை உங்களால் விரைவில் பார்க்க முடியும்" என்று கூறினார்.

முன்னதாக காயத்திலிருந்து மீண்டு வந்த முகமது ஷமி தற்போது உள்ளூர் தொடர்களில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்