< Back
கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு என்ன..? விவரம்

image courtesy: twitter/@BCCI

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணியின் வாய்ப்பு என்ன..? விவரம்

தினத்தந்தி
|
19 Dec 2024 6:51 PM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

மும்பை,

3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் நடக்கும் இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இரு அணிகள் எவை? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது. இந்த வாய்ப்பில் தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஏறக்குறைய மற்ற அனைத்து அணிகளும் வெளியேறிவிட்டன.

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உள்ள வாய்ப்பு விவரம் பின்வருமாறு:-

இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போது புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வியடைந்தால் இந்திய அணி வெளியேற நேரிடும்.

அதேவேளை 1 வெற்றி 1 டிரா சந்தித்தாலும் இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதற்கு ஆஸ்திரேலியா அடுத்ததாக நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 1 டிராவை சந்திக்க வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இந்திய அணியால் இறுதிபோட்டிக்கு முன்னேற முடியும்.

மாறாக 1 வெற்றி 1 தோல்வியை சந்தித்தால் ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அல்லது தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ( 2 போட்டிகள்) ஒயிட்வாஷ் ஆக வேண்டும். இவ்வாறு நடந்தால் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

மேலும் செய்திகள்