< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 250/5
|23 Nov 2024 3:59 AM IST
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.
ஆண்டிகுவா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.
இப்போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மைகி லூயிஸ் 97 ரன்களும், அதேன்சி 90 ரன்களும் சேர்த்தனர். வங்காளதேச தரப்பில் அந்த அணியின் தஷ்கின் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.