< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்

தினத்தந்தி
|
11 Feb 2025 2:44 PM IST

ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனி வென்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி மற்றும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் கரிஷ்மா ராம்ஹாரக் (வெஸ்ட் இண்டீஸ்), பெத் மூனி (ஆஸ்திரேலியா) மற்றும் கோங்கடி திரிஷா (இந்தியா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்கள் விவரங்களை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐ.சி.சி-யின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வெஸ்ட் இண்டீஸின் ஜோமல் வாரிக்கனும், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனியும் வென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்