< Back
கிரிக்கெட்
வானிலை சீரானது... இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் மீண்டும் தொடங்கியது
கிரிக்கெட்

வானிலை சீரானது... இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி ஆட்டம் மீண்டும் தொடங்கியது

தினத்தந்தி
|
27 Jun 2024 11:11 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

கயானா,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது. இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் தர்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரோகித் சர்மா 37 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சிறிது நேரத்தில் மழை நின்றது. எனினும், மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டி தொடங்குவது தாமதமானது. மைதான ஊழியர்கள் மைதானத்தை விரைவாக தயார்ப்படுத்தினர். இந்த நிலையில், வானிலை சீராக இருப்பதுடன், மைதானமும் விளையாட தயார் நிலையில் இருப்பதால் தற்போது போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்