< Back
கிரிக்கெட்
இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போது உண்மையில் அவர் நமக்கு தேவை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
கிரிக்கெட்

இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போது உண்மையில் அவர் நமக்கு தேவை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

தினத்தந்தி
|
22 Sept 2024 4:18 PM IST

ரிஷப் பண்ட் தோனியை போன்ற தடுப்பாட்ட டெக்னிக்கை கொண்டிருப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.

மும்பை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் தோனியை போன்ற தடுப்பாட்ட டெக்னிக்கை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். அதே சமயம் வீரேந்திர சேவாக் போல தம்முடைய அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவிக்கும் ரிஷப் பண்ட் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வெல்வதற்கு இந்தியாவுக்கு தேவை என்றும் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் கொஞ்சம் அழகான தடுப்பாட்ட டெக்னிக்கை கொண்டுள்ளார். அது தோனியின் டெக்னிக் போன்றது. மக்கள் பெரும்பாலும் தோனியின் கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியாக விளையாடும் பேட்டிங் பவர் பற்றியே பேசுகின்றனர். ஆனால் அவருடைய தடுப்பாட்ட டெக்னிக் அழகானது. ரிஷப் பண்ட் அதையே கொண்டுள்ளார். ரிஷப் பண்ட் சில நேரங்களில் தனது அணிக்கு தகுந்தாற்போல் விளையாடுகிறார். அதே சமயம் சரியான பவுலர்களை தேர்ந்தெடுப்பதிலும் அவர் ஜாக்கிரதையாக இருக்கிறார். எனவே அவர் கொஞ்சம் வீரேந்திர சேவாக் போல தன்னுடைய சொந்த வழியில் ரன்களை அடிக்கக்கூடிய ஒரு வீரர். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது உண்மையில் அவர் நமக்கு தேவை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்