< Back
கிரிக்கெட்
ரோகித், விராட் கோலிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் - இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
கிரிக்கெட்

ரோகித், விராட் கோலிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் - இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

தினத்தந்தி
|
13 Nov 2024 4:30 AM IST

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.

முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாரான பார்மில் இருக்கிறார்கள். அதனால் இம்முறை இந்திய அணியை கண்டிப்பாக ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் இந்நாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

"ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று 100% நான் உறுதியாக சொல்வேன். ரோகித் தலைமையில் நாம் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவோம். மீண்டும் ஆஸ்திரேலியாவில் நாம் வெற்றி வாகை சூடுவோம். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக விளையாடியுள்ளோம். தற்போது நாம் தொடரை வெல்லக்கூடிய அணியாக களமிறங்க உள்ளது சிறந்த விஷயமாகும்.

ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் நாம் வீழ்த்தியுள்ளோம். எனவே அவர்கள்தான் கவலையுடன் இருக்க வேண்டும். அழுத்தம் கம்மின்ஸ் மேல் இருக்குமே தவிர ரோகித் சர்மா மேல் கிடையாது. இந்தியாவுக்காக ரோகித், விராட் கோலி செய்ததை மதியுங்கள். அவர்களைப் போன்ற வீரர்கள் எப்போதும் சுமாரான பார்மில் இருந்ததில்லை.

இன்னும் விளையாடுவதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் அசத்து உள்ளதை நாம் பார்ப்போம். அவர்களுடைய மரபை ஜெய்ஸ்வால், சுப்மன், ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் 3 எடுத்துச் செல்வார்கள். ஜெய்ஸ்வால், கில் இப்போதே என்னை கவர்ந்துள்ளார்கள். அவர்கள் விராட் மற்றும் ரோகித்திடமிருந்து நிறைய அனுபவங்களையும் பெற்று இன்னும் முன்னேற்றமடைவார்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்